Loading...
 

துணைத் தலைவர் – சமூக தலைமை

 

உற்சாகப்படுத்துவது

சமூக தலைமையின் துணைத் தலைவர் என்பது Agora கிளப்புகளில் வகிக்கப்படும் புதிய அலுவலர் பாத்திரமாகும்.

தொடங்கப்பட்ட நாளிலிருந்து, உறுப்பினர்கள் பொது சொற்பொழிவையும், தலைமைத்துவத்தையும் கற்று பயிற்சி செய்யக்கூடிய நட்பு ரீதியான சூழலை உருவாக்குவது மட்டுமல்லாமல், கிளப் சூழலுக்கு வெளியே சொற்பொழிவாற்றும் வாய்ப்புகளையும், தலைமைத்துவத்தை வளர்த்துக் கொள்ளும் சூழலையும் வழங்குகிறது. மேலும், Agora உடைய குறிக்கோள்களில் ஒன்று, மக்கள் மத்தியில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் உள்ளூர் செயல்திட்டங்களின் தலைமைத்துவம் மூலம் கற்றல் செயல்பாட்டின் போது உறுப்பினர்கள் தங்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக உருவாக்குவது ஆகும்.

நாம் "மேலாண்மை" என்பதிலிருந்தும் "தலைமைத்துவத்தை" வித்தியாசப்படுத்த வேண்டும். சிறிய அளவிலான அணிகள், கிளப் அல்லது உயர் மட்ட Agora நிகழ்ச்சியை நிர்வகிப்பதன் மூலம் நிர்வாகத்தை நாம் ஓரளவிற்கு கற்றுக்கொள்ள முடியும் என்றாலும், தலைமைத்துவத்திற்கு அதிகப்படியான, அதே சமயம் வித்தியாசமான திறமைகள் தேவை. கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பின் கட்டுப்பாடுகளுக்குள் இவற்றை ஒருபோதும் கற்றுக்கொள்ள இயலாது.

நாடு அல்லது உலகளவில் - வெவ்வேறு நிறுவனங்களுடன் (வணிக, அரசு, கல்வி, முதலியன) கையாளுவது உலகளாவிய அளவில் சென்றடையவும், எங்கள் அமைப்பின் புறத்தெறிவுவை அதிகரிக்கவும் நாங்கள் முயற்சி செய்வோம் என்றாலும், உலகளாவிய அளவில் செய்யக்கூடிய விஷயங்கள் மட்டும் பல உள்ளன. உண்மையில் சொல்லப்போனால், கண்காட்சிகள், மாநாடுகள், சந்தைகள், குழு சந்திப்புகள் போன்றவை என அநேக வாய்ப்புகள் உள்ளூர் நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. 

தலைமைத்துவத்தைப் பொறுத்தவரை, நாங்கள் அதே சவாலையே எதிர்கொள்கிறோம் - குறிப்பிட்ட சிக்கல்களைச் சமாளித்து உதவுவதற்கான பெரும்பாலான வாய்ப்புகள் உள்ளூரில், சிறிய அளவிலேயே இருக்கின்றன.

 

சமூக தலைமை துணைத் தலைவர் வகிக்கும் பாத்திரம்

 

சமூக தலைமையின் துணைத் தலைவர் (VPCL) அனைத்து கிளப்புகளிலும் பங்காற்ற வேண்டிய அலுவலர் ஆவார், இவர் சமூக தலைமையின் அனைத்து பணிகளையும் திட்டங்களையும் மையப்படுத்தும் பொறுப்பில் உள்ளார்.

VPCL ஆக, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:

  • உள்ளூர் அதிகாரிகள் உட்பட, ஒத்துழைக்க ஆர்வமுள்ள எந்தவொரு வெளி நிறுவனங்களுக்கும் கிளப்பிற்கும் இடையேயான ஒரு தொடர்பு புள்ளியாக செயல்பட வேண்டும்.
  • உறுப்பினர்களுக்கான சொற்பொழிவாற்றும், தலைமைத்துவம் பங்காற்றும் மற்றும் தன்னார்வ பணிக்கான வாய்ப்புகளை ஆய்ந்து அறியும் பொறுப்பு இவருக்கு உள்ளது.
  • கல்வியின் துணைத் தலைவருடன் இணைந்து, கல்வித் திட்டத்தின் வாயிலாக அனுபவம் மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையிலும், அவர்களின் நேர அர்ப்பணிப்பு மற்றும் கிளப்புடன் அவர்கள் கொண்டிருக்கும் ஈடுபாட்டைப் பொறுத்தும், வேறுபட்ட சொற்பொழிவாற்றும் வாய்ப்புகளுக்கு எந்த கிளப் உறுப்பினர்கள் பொருத்தமானவர்களாகவும், தகுதி உடையவர்களாகவும் இருப்பார்கள் என்பதை தீர்மானிப்பது இவரது பொறுப்பாகும்.
  • தனது கிளப்பின் செயல்பாடுகளை அப்பகுதியில் உள்ள மற்ற Agora கிளப்புகளுடன் ஒருங்கிணைக்கும் பொறுப்பு இவருக்கு உள்ளது.
  • குறிப்பிட்ட உறுப்பினரின் தலைமைத்துவ அனுபவத்தை கருத்தில் கொண்டு செயல்திட்டத்தின் நோக்கத்திற்கு பொருத்தமானதா (அதிகப்படியாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல்) என்பதைத் தீர்மானிப்பது உட்பட, உறுப்பினர்களின் தலைமைத்துவ திட்டங்களுக்கான முன்மொழிவுகளை அங்கீகரிக்கும் பொறுப்பில் இருப்பவர்.
  • ஏற்கனவே உள்ள தலைமை செயல்திட்டங்களில் தனிப்பட்ட உறுப்பினர்களின் பங்களிப்பை பரிந்துரைக்கும், ஒப்புதல் அளிக்கும் பொறுப்பு இவருடையது.

அலுவலர்கள் வகிக்கும் பாத்திரங்கள் அனைத்தையும் போலவே, கிளப் தலைவரைத் தவிர, முயற்சியும் நேரமும் கூடுதலாக தேவை என்ற நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் VPCL பாத்திரத்தைக் கொண்டிருக்க முடியும், மேலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பணிக்காக மற்ற உறுப்பினர்களின் உதவியையும் நாடலாம். மேலும், சிறிய கிளப்புகளில் ஒரு நபர் ஒரே நேரத்தில் VPCL மற்றும் பிற அலுவலர் பாத்திரங்களை வகிக்கலாம்.

ஒரே மாதிரியான முயற்சிகளை முன்னெடுப்பதைத் தவிர்ப்பதற்கு ஆர்வமுள்ள பகுதியில் உள்ள பிற கிளப்புகளின் VPCLகளுடன் அந்தந்த கிளப்பின் VPCL ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒரு பகுதியில் உள்ள அனைத்து கிளப்புகளின் VPCL களும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும், "இந்தச் செயல்திட்டத்தை யார் பெற்றார்கள், அந்தச் செயல்திட்டத்தை யார் பெற்றார்கள், இந்தச் சொற்பொழிவுக்கான வாய்ப்பை யார் பெற்றார்கள்"  என்று போட்டிப்போடக்கூடாது. கிடைக்கக்கூடிய விருப்பங்கள் பற்றிய தகவல்கள் பகிரப்பட வேண்டும், மேலும் ஒரு பகுதியில் சமூகத் தலைமைத்துவம் அல்லது சொற்பொழிவுக்கான வாய்ப்புகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ள VPCL களுக்கு மீதமுள்ள VPCL கள் உதவ வேண்டும். உண்மையில் சொல்லப்போனால், இறுதி இலக்கானது VPCL களால் உருவாக்கப்பட்ட வாய்ப்புகளின் உலகளாவிய தரவுத்தளத்தை கட்டமைப்பதாக இருக்க வேண்டும், அதில் இருந்து உறுப்பினர்கள் தேர்வு செய்யலாம்.

 

வெளிப்புறத்தில் பொது சொற்பொழிவாற்றுவதற்கான வாய்ப்புகள்


அடிப்படை கல்வித் திட்டத்தின் முதல் இரண்டு தொகுதிகளை ("முதல் மூன்று செயல்திட்டங்கள்" மற்றும் "சொற்பொழிவாற்றுவதன் அடிப்படைகள்") பூர்த்தி செய்த உறுப்பினர்களே வெளிப்புறத்தில் பொது சொற்பொழிவாற்றும் வாய்ப்புகளுக்கு தகுதியுடையவர்கள்.

இந்தப் பாத்திரத்திற்கான அனைத்து கருத்துகளும் பரிந்துரைகளும் கிடைத்தவுடன் வெளிப்புறத்தில் பொது சொற்பொழிவாற்றும் வாய்ப்புகளை எப்படி கண்டுபிடிப்பது மற்றும் / அல்லது உருவாக்குவது என்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகள் வெளியிடப்படும். பொதுவாக, இவற்றில் பின்வருபவை இடம்பெறும்:

  • பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சமூக நடவடிக்கைக் குழுக்களில் விரிவுரைகள் மற்றும் பயிற்சி பட்டறைகள்
  • கிளப் ஏற்பாடு செய்த திறந்த நிலை நிகழ்ச்சிகள்
  • பொது சொற்பொழிவாற்றும் பிற அமைப்புகள்
  • மாநாடுகள், திருவிழாக்கள் மற்றும் கண்காட்சிகள் 
  • கிளப்/Agora யூடியூப் சேனல்கள் மற்றும் பாட்காஸ்ட்கள்
  • வணிக வலையமைப்பு குழுக்கள் மற்றும் நிகழ்ச்சிகள்
  • சமூக நிகழ்ச்சிகள் (திருமணங்கள், விருந்துகள் போன்றவை)

 

Before Public Speaking 1200x627

 

 

பங்கேற்பு குறித்த விதிமுறைகள்

வெளிப்புற பங்கேற்புக்கான வாய்ப்புகள் இருக்கும்போது, அவை ஃபவுண்டேஷன் உடைய இலட்சியங்கள் மற்றும் மதிப்புகளுக்கு உகந்தாற் போல் இருப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, பின்வருவனவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்:

  • கிளப் உறுப்பினர்கள் அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வெளிப்புற பங்கேற்பு வழங்கப்பட வேண்டும். உதாரணமாக, பாரபட்சமான விவரக்குறிப்புடன்  ("சொற்பொழிவாற்றும் நிகழ்ச்சிக்காக நாங்கள் வெள்ளை ஆண்களைத் தேடுகிறோம்", "ஒரு தேவாலய நிகழ்ச்சியில் பேச ஒரு கிறிஸ்தவரை நாங்கள் தேடுகிறோம் ") பொருந்தக்கூடிய பேச்சாளர்களே பங்கேற்க வேண்டுமென்று கூறும் நிறுவனங்கள் அல்லது நிகழ்ச்சிகளில் Agora கிளப்புகள் பங்கேற்கக்கூடாது.
  • அத்தகைய எந்தவொரு பங்கேற்பும் அனைத்து கிளப் உறுப்பினர்களுக்கும் தன்னார்வத்தின் பேரில் இருக்க வேண்டும்.
  • அத்தகைய எந்தவொரு பங்கேற்பும் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் (மற்றும் ஒருபோதும் கிளப்பின் பிரதிநிதியாகவோ அல்லது எவ்வகையிலும் Agora Speakers International சார்பாகவோ மேற்கொள்ளப்படக்கூடாது).
  • இத்தகைய பங்கேற்புகள் கிளப்பிற்கும் மூன்றாம் தரப்பு நிறுவனத்திற்கும் இடையில் எந்தவொரு நிரந்தர கூட்டாண்மையையோ அல்லது தொடர்பையோ கொண்டிருக்கக்கூடாது.

சில நேரங்களில், இந்தப் பங்கேற்புகள் வழக்கமான முறையிலும், சமச்சீர் முறையிலும் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும் (எ.கா., Agora கிளப் உறுப்பினர்கள் எக்ஸ் என்ற இடத்தில் பேசுவார்கள், இதற்கு ஈடாக, எக்ஸ் உறுப்பினர்கள் Agora கிளப்பில் பேசுவார்கள்). இத்தகைய சந்தர்ப்பங்களில், தயவுசெய்து பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்:

  • Agora கிளப் சந்திப்புகளில் வழக்கமாக நடைபெறும் இந்த வெளிப்புற பங்கேற்புக்கு கிளப் உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஒப்புதல் அளிக்க வேண்டும், இந்த ஒப்புதலானது ஒரு வருட காலம் வரையில் நீடிக்கும். இந்த ஒப்புதல் எந்த நேரத்திலும் பெரும்பான்மையான கிளப் உறுப்பினர்களால் ரத்து செய்யப்படலாம்.
  • விருந்தினர்களிடையே எவ்விதமான பாகுபாடும் இருக்கக்கூடாது (இதில் விருந்தினர் என்பவர் ஏதேனும் வகையில், நேரடியாகவோ அல்லது இணையம் வாயிலாகவோ, Agora கிளப் சந்திப்பில் பங்கேற்கும் Agora-வை சாராத உறுப்பினர் ஆவார்).
  • அனைத்து விருந்தினர்களும் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் மற்றும் அவர்களின் பின்னணி என்ன என்பதை பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியான பாத்திரங்களை மேற்கொள்ள வேண்டும், மேலும் இந்தப் பாத்திரங்கள் கிளப் பதிவுத் தகவலுடன் பொருந்த வேண்டும்.
  • வெளிப்புற பங்கேற்புகள் அனைத்தும் Agora கல்வி வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். குறிப்பாக, அனைத்து பங்கேற்புகளும் நேரம் கணக்கிடக்கூடியதாகவும், இலக்கணவாதியால் கண்காணிக்கப்படுபவையாகவும் இருக்க வேண்டும், மேலும் முன்கூட்டியே அறியப்பட்ட தெளிவான குறிக்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் Agora மதிப்பீட்டு வழிகாட்டுதல்களின்படி மதிப்பீடு செய்யப்படக்கூடியதாக இருக்க வேண்டும்.
  • வெளிப்புற பங்கேற்பானது வழக்கமான சந்திப்பு வணிக நடவடிக்கைகள், சந்திப்பின் அமைப்பு அல்லது பாத்திரங்களின் குறிப்பிட்ட பணி ஆகியவற்றில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தக் கூடாது. உதாரணமாக, வெளிப்புற பங்கேற்பாளர்தான் முதலில் பேச வேண்டும் அல்லது குறிப்பிட்ட நபர் மட்டுந்தான் வெளிப்புற பங்கேற்பாளரை மதிப்பீடு செய்ய வேண்டும் என்கிற எந்தத் தேவையுமில்லை.
  • சந்திப்பிற்கான செயல்பாட்டுத் தலைவரும் அவருடைய மதிப்பீட்டாளரும் கிளப்பிற்கு வெளி நபராக இருக்கக்கூடாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குறிப்பாக, தயார் செய்யப்பட்ட சொற்பொழிவுகளுக்கு - பேச்சாளர் அல்லது மதிப்பீட்டாளர் எப்போதும் அந்தக் கிளப்பின் உறுப்பினராக இருக்க வேண்டும்.
  • இந்த வெளிப்புற பங்கேற்பானது மைய கொள்கைகள் எதனையும் மீறக்கூடாது. குறிப்பாக, ஏதேனும் குறிப்பிட்ட அரசியல், கருத்தியல் அல்லது தார்மீக ரீதியான உலகக் கண்ணோட்டங்களை ஊக்குவிக்கும் நிறுவனங்களிலிருந்து எவ்விதமான வழக்கமான வெளிப்புற பங்கேற்பும் இருக்காது. மேலும் இந்தப் பங்கேற்புகள் ஏதேனும் மூன்றாம் தரப்பு நிறுவனங்கள், சேவைகள் அல்லது தயாரிப்புகளை ஊக்குவிக்காது. அறிவியல் ரீதியாக போலியான உலகக் கண்ணோட்டங்களை ஊக்குவிக்கும் அமைப்புகளின் பங்கேற்பு அனுமதிக்கப்படாது.
  • வருடம் ஒன்றுக்கு இந்த வெளிப்புற பங்கேற்புகளின் எண்ணிக்கை செயல்பாட்டு கிளப் தேவைகள் சரிபார்ப்பு பட்டியலில் (கிளப் வகையைப் பொறுத்து) குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

 

வெளிப்புறத்தில் சொற்பொழிவாற்றுவதற்கான வாய்ப்புகளை நீங்கள் ஒரு பரிசாகவும் உறுப்பினர்களுக்கான வாய்ப்பாகவும் கருத வேண்டும். பேச்சாளர்களுக்காக ஒரு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நீங்கள் தெளிவாக அறிந்திருக்காவிட்டால், கிளப் அல்லது உறுப்பினரின் சார்பாக கட்டணம் கேட்கவோ அல்லது கட்டணத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தவோ முயற்சிக்கக்கூடாது.

 

வெளிப்புறத்தில் தலைமைத்துவத்திற்கான வாய்ப்புகள்

உறுப்பினர்களுக்கு தலைமைத்துவத்திற்கான வாய்ப்புகளை கண்டுபிடிக்கும் பொறுப்பும் VPCL உடையதாகும். தலைமைத்துவ வரிசை அமைப்பு வெளியீடு மற்றும் சமூக திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களுடன் இந்தப் பகுதி பிந்தைய கட்டத்தில் முழுமையாக உருவாக்கப்படும்.

 

 

 


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:01:59 CET by agora.